குமரியில் கூலிப்படை மூலம் பெண்ணை கடத்த முயற்சி. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 13 June 2024

குமரியில் கூலிப்படை மூலம் பெண்ணை கடத்த முயற்சி.

 


குமரியில் கூலிப்படை மூலம் பெண்ணை கடத்த முயற்சி.


தலைமறைவாக உள்ள மகள், மருமகனை பிடிக்க 2 தனிப்படை

6 பேர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்

நாகர்கோவில், ஜூன் 13: கன்னியாகுமரியில் கூலிப் படை மூலம் பெண்ணை கடத்த முயன்ற சம்பவத் தில் தலைமறைவாக உள்ள மகள், மருமகனை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

குமரி மாவட்டம் ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் மிக்கேல் தேவ சகாயம். இவரது மனைவி ஜெபி சகாய மெட்டில்டா (47). இவரது மூத்த மகள் அஸ்மி (27). இவரது கண வர் சுபாஷ் (33). அஸ்மி யிடம் இருந்து 40 பவுன் தங்க நகை, ரூ.2.50 லட்சம் பணத்தை ஜெபி சகாய மெட்டில்டா வாங்கி உள்ளார். ஆனால் இதை திரும்ப கொடுக்க வில்லை என கூறப்படுகிறது.

இதற்கு பதிலாக, ஜெபி சகாய மெட்டில்டா பெய ரில் உள்ள சொத்தை எழுதி கேட்டு உள்ளனர். இது தொடர்பான பிரச்னையில் அவரை கடத்தி, சொத்து பத்திரத் தில் கையெழுத்து வாங்க முயற்சித்துள்ளனர். சம்ப வத்தன்று கூலிப்படை வைத்து நடந்த கடத்தல் முயற்சியை சரியான நேரத்தில் காவல்துறையினர்
கண்டுபிடித்து தடுத்தனர். 

இது தொடர்பாக கூலிப்படையாக செயல் பட்ட சென்னை மேட வாக்கத்தை சேர்ந்த டானு (24), நாகர்கோவில் மணிக் கட்டிபொட்டல்பகுதியை
சேர்ந்த மகேஷ் ராஜன் (24), நாகர்கோவில் வட்ட விளை பகுதியை சேர்ந்த அரவிந்த் (19), அஜெய் (19) மற்றும் நாகர்கோவில் பீச்ரோடு பகுதியை சேர்ந்த இரு இளம் சிறார்கள் என 6 பேரை போலீசார் கைது செய்தனர். சுபாஷ் அவரது மனைவி அஸ்மி ஆகியோரை தேடி வருகிறார்கள்.

4 கடத்தலை தடுத்த நெடுஞ்சாலை போலீசாரை ரோந்து பே எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

நெடுஞ்சாலை ரோந்து போலீசுக்கு எஸ்.பி. பாராட்டு

ஜெபி சகாய சகாய மெட்டில்டா கடத்தலை தடுக்கும் வகையில், தகவல் வந்ததும் துரிதமாக செயல்பட்ட நெடுஞ்சாலை ரோந்து போலீ சாரை எஸ்.பி. சுந்தரவதனம் பாராட்டினார். அவர்களை எஸ்.பி. அலுவலகத்துக்கு நேரில் அழைத்து சான்றிதழ் வழங்கிய எஸ். தொடர்ந்து இது போன்று போன்று விழிப்புடன், பி., வேகமாக செயல்பட்டு குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டும் என கூறினார்.

கூலிப்படையினர் சிக் கியது எப்படி? என்பது தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உன்ளன. கூலிப்படையினர், கன்னியாகுமரி கோவ ளம் சாலையில் காரில் நின்று கொண்டு இருந்த னர். காரில் பெட்ரோல் இல்லாததால், அந்த வழி யாக சென்றவர்களிடம் உதவிகள் கேட்டுள்ளனர். 

அப்போது தான் இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த
பொதுமக்கள், காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ள னர் கோவளம் சாலையில், காரில் நிற்கும் கும்பல் மீது சந்தேகம் உள்ளதாக கூறி உள்ளனர். இதையடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசாருக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது நெடுஞ் சாலை ரோந்து போலீசார், சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைத்தனர்.

போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்த கூலிப்படையினர் தப்பி னர்.  இவர்களை கன்னியாகுமரி முழுவதும் தேடினர். அப்போது லாட்ஜில் இவர்கள் அறை எடுத்து பதுங்கிய தகவல் தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை
சுற்றி வளைத்து போலீ சார் கைது செய்தனர். கூலிப்படையினர் சரி யான நேரத்தில் கைது செய்யப்படாமல் இருந்தி ருந்தால், கொலை சம்ப வம் கூட நடந்திருக்கும். என போலீசார் கூறினர். இவர்களின் கார்களில் இருந்து மிளகாய் பொடி பாக்கெட்டுகள் கத்திகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின் றன.

தற்போது இந்த சம்ப வத்தில் சுபாஷ், அவரது மனைவி அஸ்மி ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்கடி.எஸ். பி. மகேஷ்குமார் தலைமை யில் 2 தனிப்படை அமைக் கப்பட்டுள்ளது. தனிப்ப டையினர் தீவிர தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கி உள்ளனர். இவர்கள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment