பெட்ரோல் பங்கில் செல்போன்கள் திருட்டு -சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 21 June 2024

பெட்ரோல் பங்கில் செல்போன்கள் திருட்டு -சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்.

 


பெட்ரோல் பங்கில் செல்போன்கள் திருட்டு -சிசிடிவியில் சிக்கிய மர்ம நபர்.


கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பத்மநாபபுரம் அரண்மனை சாலை பகுதியில் ஒரு பெட்ரோல் பங்க் உள்ளது.இங்கு பணிபுரியும் ஊழியர் பணம் வசூலிக்க பயன்படுத்தும் 2 விலை உயர்ந்த செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கி உள்ளனர்.அவர்கள் விழித்தபோது செல்போன்கள் மாயமாகி இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், மேலாளருக்கு தகவல் கொடுத்தார். இது குறித்து பெட்ரோல் பங்க் மேலாளர் கிருஷ்ணன் தக்கலை நிலையத்தில் போலீஸ் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் போலீசார் பெட்ரோல் பங்கில். பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவை ஆய்வு செய்தனர். அப்போது, பங்க் ஊழியர்கள் அதிகாலை 3 மணியளவில் அயர்ந்து தூங்கி கொண்டிருந்ததை நோட்டமிட்ட மர்ம நபர் பெட்ரோல் பங்கிற்குள் வந்து சார்ஜ் போடப்பட்டிருந்த 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி செல்வது பதிவாகி இருந்தது. சி.சி.டி.வி. காமிராவில் பதிவானதை ஆய்வு செய்த தக்கலை போலீசார் செல்போனை திருடி சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

No comments:

Post a Comment