கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா முழுக்கோடு ஊராட்சி புண்ணியம் பகுதியை சேர்ந்த அகஸ்டின்(52) இவர் சில நாட்களாகவே மதுவுக்கு அடிமையாகி குடும்பத்தினருடன் பிரச்சனையில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவு அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு மனைவியுடன் தகராறு செய்துள்ளார். பிறகு விடியற்காலை 3 மணிக்கு ஒரு கயிறை எடுத்துக்கொண்டு பக்கத்தில் உள்ள ஒரு மரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் கண்டு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அருமனை போலீசார் வந்து உடலை கைப்பற்றி வெட்டுமணி அரசு மருத்துவமனை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர் இது குறித்து அருமனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்

No comments:
Post a Comment