மாற்றுதிறன் பயனாளிகள் 281 பேருக்கு நலத்திட்ட உதவிகள் .
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஸ்காட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கத்தில் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் , இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (அலிம்கோ) மற்றும் மாற்றுத்திறனாளி நலத்துறை இணைந்து நடத்திய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அழகு மீனா தலைமை வகித்தார். மேயர் ரெ.மகேஷ் , மாநகராட்சி ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, முன்னிலை வகித்தனர். அமைச்சர் மனோதங்கராஜ் மாற்றுத்திறன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
விழாவில் 24 மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலிகள் , 9 மோட்டார் பொருத்தப்பட்ட முச்சக்கரவண்டிகள், 5 முச்சக்கரவண்டிகள், 60 சக்கர நாற்காலிகள், 17 சி.பி சக்கர நாற்காலிகள் , 104 BTE காது கேட்கும் கருவி, 26 சுகம்யா கேன்ஸ், 21 திறன்பேசி, 36 பார்வையற்றோர்களுக்கான தொகுப்பு, 94 ஊன்றுகோல்கள், 15 உருளைகள், 11 வாக்கிங் ஸ்டிக்ஸ், 1 ப்ரெயிலி கேன், 51 செயற்கை கால்கள் என 281 பயனாளிகளுக்கு ரூ.44.72 இலட்சம் மதிப்பில் 475 உபகரணங்கள் வழங்கப்பட்டது.

No comments:
Post a Comment