பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 July 2024

பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.

 


பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை கொடுக்கும் வசதியுடன் கூடிய புறக்காவல் நிலையத்தை  திறந்து வைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்.



கன்னியாகுமரி   திரிவேணி சங்கமம் கடற்கரைப்பகுதியில் புதிதாக மாவட்டக் காவல்துறையால்  அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தை இன்று (08.07.2024) மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம்   அவர்கள் திறந்து வைத்தார்.



புதிதாக அமைக்கப்பட்ட புறக்காவல் நிலையத்தில் கடற்கரைக்கு வரும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் விதத்தில்,  24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் 34 CCTV கேமராக்கள் பொருத்தப்பட்டு அதனை புறக்காவல் நிலையத்தில் கண்காணிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.



பேரிடர் காலங்கள் மற்றும் கடல் சீற்ற காலங்களில் கடற்கரையில் இருக்கும் பொதுமக்களை எச்சரிக்கை செய்து, பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தும் வண்ணம் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட்கோட்ட காவல்துணை கண்காணிப்பாளர் திரு. மகேஷ் குமார், கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் திரு. நெப்போலியன், கன்னியாகுமரி போக்குவரத்து ஒழுங்கு பிரிவு ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment