அல்லோலப்படும் மாணவ, மாணவிகள் கவனிக்குமா போக்குவரத்து துறை மற்றும் மாவட்ட நிர்வாகம்
நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து காலை வேளையில் புறப்படும்
தடம் எண் 14V
பேருந்து பதிவு எண் : TN74 N1616
நாகர்கோவில் முதல் கடியப்பட்டினம் வரை செல்லும் பேருந்து பல நாட்களில் எந்த ஒரு பஸ் நிறுத்தத்திற்கும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. இந்த பேருந்து தடத்தில் பல பள்ளி மற்றும் கல்லூரிகளும் உள்ளது.
குறிப்பாக காலை வேளை என்பதால் பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக பேருந்து சரியான நேரத்திற்கு வராத காரணத்தினால் தாமதமாக பள்ளிக்கு செல்வதால் அங்கும் மாணவ, மாணவிகள் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
அதுமட்டுமின்றி வேலைக்கு செல்பவர்களுக்கும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து பேருந்து நடத்துனரிடம் கேட்டாலும் முறையான பதில் கொடுப்பதில்லை.
ஆகவே மாணவ, மாணவிகளின் நலன் கருதி போக்குவரத்து துறை முறையாக விசாரித்து சரியான நேரத்திற்கு பேருந்து வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அத்துடன் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் மாவட்ட ஆட்சி தலைவரும் இதை கவனத்தில் எடுக்கவேண்டும் என்பதே மாணவ. மாணவிகளின் கோரிக்கை.

No comments:
Post a Comment