9 நாள் தடைக்குப் பின் திற்பரப்பு அருவியில் குளிக்க அனுமதி
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகள் குளங்கள் நிரம்பின. குறிப்பாக மழை காரணமாக பேச்சிப்பாறை அணையிலிருந்து தினம் 500 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டிருந்து. இதனால் கோதையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வந்தது. இதனால் அருவியில் திற்பரப்பு பேருராட்சி சார்பில் சுற்றுலா பயணிகள் குளிக்க கடந்த 9 நாட்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது . இந்த நிலையில் தற்போது மழை சற்று தணிந்த நிலையில், அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் மூடப்பட்டதால் அருவியில் கொட்டும் தண்ணீரின் அளவும் சீரானது. இதையடுத்து 9 நாட்களுக்குப் பிறகு இன்று அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இதனால் பயணிகள் உற்சாகத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

No comments:
Post a Comment