மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடைபெற்ற மாபெரும் கடன் மேளா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 27 July 2024

மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடைபெற்ற மாபெரும் கடன் மேளா.


மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடைபெற்ற மாபெரும் கடன் மேளா.


தூத்துக்குடி, ஜூலை.27, மாவட்ட ஆட்சியர் அலுவலக முத்து அரங்கில் மத்திய கூட்டுறவு வங்கி மூலம் நடைபெற்ற மாபெரும் கடன் மேளா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன்  முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தலைமையில்,


107 மகளிர் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 1422 பயனாளிகளுக்கு ரூ.13,69,70,000 மதிப்பிலான கடன் உதவிகளையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின்கீழ் ரூ.11.65 இலட்சம் மதிப்பீட்டில் 10 பயனாளிகளுக்கு  வேலை உத்தரவினையும், கலைஞரின் கனவு இல்லம்  திட்டத்தின்கீழ் ரூ.70 இலட்சம் மதிப்பீட்டில் 20 பயனாளிகளுக்கு வேலை உத்தரவினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 14 பேருக்கு திறன்பேசிகள், 2 பேருக்கு பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலி, 3 பேருக்கு இணைப்பு சக்கரம்  பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் ஆகியவற்றை வழங்கினார்.


பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்ததாவது: கூட்டுறவு வங்கியில் கடன் என்பது, மிகக் குறைந்த வட்டியில் கடன் வழங்கக்கூடிய ஒன்றாகும். இதை சரியாக பயன்படுத்தி வாழ்க்கையில் கனவுகளை நிறைவேற்றக்கூடிய நிலையை அடைய வேண்டும். ஆர்வம், சுய சிந்தனை இருக்கும்போது நிச்சயமாக நீங்கள் நகர்ப்புறங்களில் இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாற முடியும். அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக நமது மாவட்டத்தில் கிட்டத்தட்ட 1736 பேருக்கு அதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆட்சியில் பழுதடைந்த வீட்டையும் சரிசெய்வதற்கான திட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். உங்களது தேவையை அறிந்து, உணர்ந்து மக்களுக்கு தந்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி தந்து கொண்டிருக்கக்கூடிய ஆட்சி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான ஆட்சி.


அரசின் திட்டங்களை பயன்படுத்திக்கொண்டு மிகச்சிறந்த பலன்களை நீங்கள் அடைய வேண்டும் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் தெரிவித்தார்.


சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் வாயிலாக நமது மாவட்டத்தில் இன்று 1736 பேருக்கு ஆணை வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல் பழுதடைந்த வீடுகளை சரிசெய்வதற்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள். பராமரிப்பிற்கு ரூ.55000 வரை தமிழ்நாடு அரசு வழங்குகிறது. இத்திட்டத்தில் 2600 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்.


மத்திய கூட்டுறவு வங்கி மூலம் சிறுதொழில் புரிபவர்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.  பணிபுரியும் பெண்களுக்கான கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் என 10 வகையான கடன்கள் வழங்கப்படுகிறது. மத்திய கூட்டுறவு வங்கி மூலம் இன்று 15.46 கோடி மதிப்பில் இன்று கடன் வழங்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிக்கு மோட்டார் பொருத்திய வண்டி வழங்கப்படுகிறது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் தெரிவித்தார்.


நிகழ்ச்சியில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய்சீனிவாசன், தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் ம.பிரபு, இணைப்பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) முரளிகண்ணன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர்/ செயலாட்சியர் பொ.நடுக்காட்டு ராஜா, துணை மேயர் செ.ஜெனிட்டா,  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


தூத்துக்குடி மாவட்டம் தென் மண்டல ஒருங்கிணைப்பாளர் Vn சரவணன் தமிழக குரல் செய்திகள்.

No comments:

Post a Comment