கக்கன்புதூர் காடேற்றி இரண்டு கிராமங்களுக்கு நிறுத்திய பேருந்துகளை மீண்டும் இயக்க ஆட்சியரிடம் மனு.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கக்கன்புதூர், காடேற்றி ஆகியஇரு கிராமங்களுக்கு இயக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தியதால் பள்ளி மாணவ மாணவியர், நோயாளிகள் தினசரி 8 கி.மீ தூரம் நடந்து சென்று வருவதால் பெரும் சிரமம் அடைந்து உள்ளனர் எனவே நிறுத்திய பேருந்தை மீண்டும் இயக்க கேட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் கோபி பேரறிவாளன் தலைமையில் சம்மந்தபட்ட ஊர் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். இதில் மாநகர மாவட்ட செயலாளர் அல்காலித் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment