சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர் பெனில் (19). கல்லூரி மாணவர்
ரீத்தாபுரத்தில் உள்ள நண்பர் வீட்டில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று அங்கு தங்கியுள்ளார். பின்னர் நான்கு நண்பர்களுடன் அங்குள்ள குளத்தில் குளிக்க சென்றார். அப்போது பதில் நீச்சல் அடித்து குளத்தின் மறுகரைக்கு செல்ல முயன்ற போது, சோர்வடைந்து நீந்த முடியாமல் பெனில் திணறியதாக கூறப்படுகிறது.
அவரை மீட்க நண்பர்கள் முயன்றனர். அதற்குள் பரிதாபமாக குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். உடனடியாக குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் பெனிலை சுமார் 5 மணி நேரம் தேடியும் மீட்க முடியவில்லை. தொடர்ந்து மூச்சுப் பயிற்சி பெற்ற வீரர்கள் சுமார் 20 அடி ஆழத்தில் சென்று தேடி உடலை மீட்டனர். குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment