பொதுமக்களை ஏமாற்றி ரூபாய் 30 கோடி மோசடி 3 பேர் கைது
கன்னியாகுமரி மாவட்டம் நட்டாலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரராஜன். இவருக்கு ஆனந்தராஜன், அரவிந்த ராஜன்,அரனீஸ் ராஜன் என மூன்று மகன்கள் உள்ளனர். ஆனந்தராஜன் மனைவி நேசிகா உட்பட ஐந்து பேரும் சேர்ந்து கன்னியாகுமரி மாவட்டம் உண்ணாமலைகடை பகுதி அருகே அன்சிகா மார்ட் என்ற பெயரில் முந்திரி ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிறுவனத்தின் மேலாளராக விரிகோடு பகுதியை சேர்ந்த அனீஸ் உள்ளார். இவர்கள் தான்சானியா நாட்டில் இருந்து முந்திரியை மொத்தமாக வாங்கி வெளிநாட்டான துபாய் மற்றும் தமிழகம் மற்றும் கேரளா பகுதிக்கு ஏற்றுமதி இறக்குமதி வியாபாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக முதலில் அப்பகுதியில் உள்ள மக்களை ஏமாற்றி பணம் வாங்கி அதற்கு பத்து சதவீதம் வட்டி தருகிறேன் என கூறி பணத்தை வாங்கியுள்ளனர். முதல் ஒரு வருடம் பொதுமக்களுக்கு வட்டியும் கொடுத்துள்ளனர். மாவட்டத்தை சார்ந்த 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த நிறுவனத்தில் பணத்தை கொடுத்துள்ளனர். ஒரு அளவுக்கு மேல் வட்டி கொடுக்க முடியாமல் ஹன்சிகா மார்க் நிறுவனர்கள் தலைமறைவாகி யுள்ளனர். பணத்தை இழந்த பொதுமக்கள் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கொடுத்த புகாரியின் அடிப்படையில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு இந்த புகாரை மாற்றம் செய்து உத்தரவிட்டார். விசாரணையில் 400 க்கும் மேற்பட்ட பொதுமக்களை ஏமாற்றி 30 கோடி ரூபாய் மோசடி செய்தது அம்பலமானது. இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று நட்டாலம் பகுதியை சேர்ந்த அனீஸ் ராஜன், சுந்தரராஜன் மற்றும் கடை மேலாளர் அனி ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் ஆனந்தராஜன் அரவிந்தராஜன் நேசியா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment