எச்.வசந்தகுமார் நான்காம் ஆண்டு நினைவு தினம் குமரி தா.ஆதிலிங்கபெருமாள் அஞ்சலி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 30 August 2024

எச்.வசந்தகுமார் நான்காம் ஆண்டு நினைவு தினம் குமரி தா.ஆதிலிங்கபெருமாள் அஞ்சலி


எச்.வசந்தகுமார் நான்காம் ஆண்டு நினைவு தினம் குமரி தா.ஆதிலிங்கபெருமாள் அஞ்சலி


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவரும் கன்னியாகுமரி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எச்.வசந்தகுமார் அவர்களின் 4 வது ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி கன்னியாகுமரி மாவட்ட அகஸ்தீஸ்வரத்தில் உள்ள அவரது மணி மண்டபத்தில் வைத்து  நடைபெற்றது இதில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி ஓபிசி துறையின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் மகாராஷ்டிரா மற்றும் கேரளா மாநில பொறுப்பாளரும் அகஸ்தீஸ்வரம் 13வது வார்டு கவுன்சிலரும் கன்னியாகுமரி மாவட்ட திட்டக்குழு உறுப்பினருமான தா.ஆதிலிங்கபெருமாள் கலந்து கொண்டு எச்.வசந்தகுமார் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் உடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில செயலாளர் கலைச்செல்வன் அகில இந்திய காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் ஆரோக்கியராஜன் துனைத்தலைவி சரோஜா பேரூராட்சி கவுன்சிலர் குறமகள் உள்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment