பள்ளம் தோண்டி நாசமாகும் தார்ச்சாலைகள்
கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் தாலுகா குலசேகரம் பேரூராட்சியில் கொல்லறை என்னும் இடத்தில் ஜேசிபி இயந்திரத்தால் சாலையைத் தோண்டி அதை சரியாக மூடாமல் வாகனங்கள் சரியாக செல்ல முடியாத நிலைமையில் உள்ளது. ஒரு வாகனம் சென்றால் மற்றொரு வாகனத்திற்கு சைடு குடுக்க கூட முடியாத நிலையில் உள்ளது. உள்ளூர் சாலைகள் அனைத்தும் இதே நிலையில் தான் உள்ளது என்று மக்களும் வாகன ஓட்டிகளும் கவலைப்படுகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் தான் இந்த வேலைகளை அதிகமாக செய்கின்றனர் என்று மக்கள் கவலைப்படுகின்றனர். இந்த மெத்தன போக்கை அரசு கவனிக்குமா?
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment