நிதி நிறுவனம் நடத்தி பல கோடி மோசடி மக்கள் சாலை மறியல்
கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி மக்களிடம் நகை மற்றும் பணம் ஆகியவற்றை சுருட்டி சென்ற பனங்கரை பகுதி சார்ந்த வின்சென்ட், மாறப்பாடி பகுதியை சார்ந்த சூசை சார்லஸ், மேலத்தெரு பகுதியே சார்ந்த அருள்ராஜ், பாண்டி மாவிளை பகுதியை சார்ந்த அல்போன்ஸ் லிபோரியா, பனங்கரை பகுதியை சார்ந்த எஸ்தாக்கி, தேமனூர் பகுதியை சார்ந்த விஜயகுமார், மாறப்பாடி பகுதியை சார்ந்த ராபின்சன் ஆகியோரை கைது செய்து மக்களின் பணம் மற்றும் நகைகளை மீட்டு தரக்கோரி பாதிக்கப்பட்ட 80-ற்கும் மேற்பட்ட ஏழை மக்கள் அருமனை சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர். 8 மாத காலமாக இந்த நிதி நிறுவனம் பூட்டப்பட்டது. போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. என்று பாதிக்கப்பட்ட மக்கள் கண்ணீர் மல்க கதறுகின்றனர். சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை போலீசார் கைது செய்து அருகில் உள்ள மண்டபத்தில் அடைத்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தாலுகா அருமனையில் இருந்து தமிழன் T.இராஜேஷ்குமார்
No comments:
Post a Comment