ஊராட்சி தலைவி மற்றும் கணவர் தூண்டுதலின் பேரில் ரவுடிகளை வைத்து கவுன்சிலர் ஜோசப் தாக்கப்பட்டார்
கன்னியாகுமரி மாவட்டம் பைங்குளம் ஊராட்சியில் சில மோசடிகளை கண்டறிய, 11-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன் படி ஊராட்சியின் பொது நிதி கணக்கு ஆவணத்தின் சில தகவல்களை எழுத்துப்பூர்வமாக முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கேட்டிருந்தார். அதற்கு, 1746 பக்கத்திற்கு ரூ.2 வீதம் 3492 ரூபாய் ஊராட்சியில் செலுத்தி பெற்றுக்கொள்ளுமாறு முஞ்சிறை ஒன்றிய அலுவலரிடம் இருந்து வந்த கடிதத்தை கொண்டு பைங்குளம் ஊராட்சியில் பணம் செலுத்த சென்ற போது பணத்தை பெற்று கொள்ளாமல் பலமுறை அலைக்கழிக்கபட்டார்.மீண்டும் 22-07-2024 அன்று பணம் செலுத்த சென்ற போது ஊராட்சி தலைவர் திருமதி விஜயராணி அவர்கள் மிகவும் தரக்குறைவாக தகவல் ஒன்றும் தரமுடியாது உன்னால் முடிந்ததை பார் என பேசி அவமானப்படுத்தியதால் கவுன்சிலர் சுரேஷ் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதை அறிந்த 11-வது வார்டு கவுன்சிலர் ஜோசப் என்பவர் அவருக்கு ஆதரவாக உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள ஊராட்சி அலுவலகத்திற்கு சென்ற போது, அங்கு ஏற்கனவே ஊராட்சி அலுவலகத்திற்குள் சில ரவுடிகளை கூட்டி வைத்திருந்த ஊராட்சி தலைவி மற்றும் அவரது கணவரின் தூண்டுதலினால் கவுன்சிலர் ஜோசப் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்தும் அடித்தும் விரட்டினர். அடிபட்டதினால் உள்காயம் அடைந்த ஜோசப் குழித்துறை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக சிகிட்சை பெற்று வந்தார். இதுபற்றிய புகார் மீது விசாரித்து வந்த புதுக்கடை போலீசார், பைங்குளம் ஊராட்சி தலைவி திருமதி.விஜயராணி மற்றும் அவரது கணவர் கிருஷ்ணராஜ், பாம்பாடிவிளை கண்ணு பிள்ளை மகன் ரெவி, ஈச்சவிளை இராமையன் மகன் ஜெகன், பரக்காணி ராஜாமணி மகன் விஜு, பண்டாரவிளை குமாரதாஸ் மகன் ரெதீஷ் ஆகியோர் மீது வழக்கு பதிந்து அவர்களை தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment