கோட்டார் போக்குவரத்து காவல்துறை - வேப்பமூடு அருகே குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட ஆட்டோ பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சுந்தரவதனம் I.P.S., அவர்கள் உத்தரவின்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சிறார் வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல், வாகனத்தில் சாகசங்கள் செய்தல், No Parking பகுதியில் வாகனம் நிறுத்தி விபத்து ஏற்படுத்துதல் போன்ற விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூட்டியா I.P.S., அவர்களின் மேற்பார்வையில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர் திரு.ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் வேப்பமூடு அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது
குடிபோதையில் ஆட்டோ ஓட்டி வந்த நாகர்கோவில் சகோதரர் தெருவைச் சேர்ந்த செல்லத்துரை என்பவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டுதல் விதிமீறல் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி நபருக்கு நீதிமன்றம் மூலமாக ரூ.10000 அபராதம் விதிக்கப்படலாம்.
No comments:
Post a Comment