பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர்-க்கு ஜாமின்!!!
தமிழக காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் மீது களியக்காவிளை காவல்நிலைய பெண் ஆய்வாளர் சுப்புலட்சுமி கடந்த 5- வது மாதம் கொடுத்த புகாரின்பேரில், குழித்துறை குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று நீதிபதி மோசஸஸ் ஜெபசிங் பல்வேறு நிபந்தனைகளுடன் சாவுக்கு சங்கருக்கு சொந்த ஜாமீன் வழங்கிங்கினார். இதனையடுத்து போலீசார் சவுக்கு சங்கரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர் அப்போது நீதிமன்றத்தில் செல்லும்போதும், நீதிமன்றத்தை விட்டு வெளியேவந்தபோதும் செய்தியாளர்களை பார்த்ததும் அடுத்த அடுத்த வழக்குகளில்
மீண்டும் மீண்டும் கைது செய்ய முயர்ச்சி நடக்கிறது. திமுக அரசு என்னை பார்த்து அஞ்சுகிறது உதயநிதி என்னை பார்த்து அஞ்சுகிறார் இதன் காரணமாகத்தான் என் மீது புதிய வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று ஆவேசமாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார். என்னை தொடர்ந்து ஜெயிலில் வைக்கவே முயற்சி நடக்கிறது என ஆவேசமாக பேசினார். கோர்ட் வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் அவரது வாகனத்தின் முன்னும் பின்னும் நாகர்கோவில் கிளை சிறையில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டார். சாவுக்கு சங்கர் அழைத்து வரப்பட்ட சம்பவத்தால் கோர்ட் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment