போலி கூப்பன் கொடுத்து மோசடி.
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடைபெறும் பொருட்காட்சி இன்றுடன் 20- நாட்கள் நிறைவு பெறுகிறது. இந்த வாவுபலி பொருட்காட்சியில் ராட்சத ராட்டினங்கள், விவசாய பொருட்கள் கண்காட்சி, கபடி போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், மேஜிக் ஷோ, வெளிநாட்டு பறவையினங்கள் உட்பட ஏராளமான அம்சங்களுடன் வாவுபலி பொருட்காட்சி களை கட்டி வருகிறது. இதன் நிறைவு விழா இன்று மாலை நடைபெற உள்ளது. இன்று நடைபெறும் நிறைவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அழகு மீனா , தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் குழித்துறை நகர மன்ற தலைவர் பொன். ஆசை தம்பி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
இந்த பொருட்காட்சி திடலில் ராட்டினங்கள் மற்றும் பக்க காட்சிகளை கண்டு களிக்க வேண்டும் என்றால் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெற்று செல்ல வேண்டும், ஆனால் விஐபி-கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு இலவச பாஸ் ஒப்பந்ததாரர் மூலம் வழங்கப்பட்டு வருவது வழக்கம், அதேபோல இந்த ஆண்டும் முக்கியமான நபர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்பட்டது. இதனைப் பார்த்த ஒரு கும்பல் விஐபி பாசை போன்று போலி அட்டை தயாரித்து கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ரூ. 200-க்கு கூவி கூவி விற்பனை செய்துள்ளனர். இது குறித்து கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment