பழுதடைந்த நிலையில் உள்ள பள்ளிக்கூடத்தை சீரமைத்து தர மாணவர்களின் பெற்றோர்கள் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டன் துறை வள்ளவிளையில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது இந்த பள்ளியில் சுமார் 35 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர் இப்பள்ளியில் இரண்டு வகுப்பறைக் கட்டிடங்கள் அமைந்துள்ளது அவற்றில் ஒரு கட்டிடம் கான்கீரட் கூரையுடன் அமைந்துள்ளது இன்னொரு கட்டிடம் பழுதடைந்த நிலையில் உபயோகிக்க முடியாது நிலையில் அபாயமானதாக உள்ளது கடந்த ஆண்டு பருவ மழையின் போது மழை மற்றும் காற்றின் காரணமாக மேற்கூரை ஒவ்வென்றாக விழதொடங்கியது தற்போது மேலும் அதிக அளவில் பழுதடைந்து மாணவிகள் உள்ளே அமர்ந்து கற்றல் செயலில் ஈடுபடமுடியாத ஆபாத்தான நிலையில் உள்ளது இதனால் பெற்றோர்கள் மாணவிகளை இப்பள்ளிக்கு அனுப்ப அஞ்சுகின்றனர் மேலும் பள்ளிக்கூடத்தில் ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது இதில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் ஒரே கழிப்பறையை பயன்படுத்தும் பரிதாபமான நிலையில் உள்ளனர் பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் பள்ளி கட்டிடத்தின் பாதுகாப்பற்ற நிலை பற்றி பல பெற்றோர்களும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் மற்றும் கான்கிரீட் கட்டிடத்தில் எண்ணும் எழுத்தும் வகுப்புகள் நடைபெற்று வருகிறது தற்போது இந்த கட்டிடத்தின் சீலிங் ஆனது பழுதுபட்டு சிறிது சிறிதாக மாணவர்கள் அமர்ந்து கல்வி கற்கும் இடத்தில் விழுந்த வண்ணம் உள்ளது இதனால் மாணவர்களுக்கு காயம் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது ஆகாயால் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் பள்ளி மேற்கூரை மற்றும் மாணவர்களுக்கு மற்றும் மாணவிகளுக்கு தனி தனி கழிப்பறை அமைத்து தருமாறு கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர்கள் மனு அளித்தனர்
கன்னியாகுமரி கிள்ளியூர் தாலுகா செய்தியாளர் ஜெ.ராஜேஷ்குமார்
No comments:
Post a Comment