நாகர்கோவில் கணேசபுரம் சந்திப்பு பகுதியில் கழிவுநீர் ஓடை உடைப்பு ஏற்ப்பட்டு ராட்சச பள்ளமாக காணப்படும் சாலை!!!
3 - மாதங்கள் ஆகியும்
சீரமைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது ...
இதுதான் மாநகராட்சியின் வளர்ச்சி பணியா?
கணேசபுரம் பார்த்தாஸ் ஜவுளி கடை எதிர்புரம் நான்கு சாலைகளும் சந்திக்கும் பகுதி இது வாகனங்கள் அதிகம் செல்லும் பரபரப்பான சாலை ஆகும்.
இப்பகுதியில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாகவே சாலை ஓரமாக கழிவு நீர் ஓடை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்ப்பட்டு வருகிறது. சாலை ஓரம் உடைப்பு ஏற்ப்பட்டு சாலை குறுகிய அளவில் உள்ளதால் வாகனங்கள் செல்லும் போது நடந்து செல்லும் பொதுமக்கள் செல்வதற்க்கு மிகவும் சிரமமாக உள்ளது .
மேலும் காலை மற்றும் மாலை வேளைகளில் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகள் சாலையை கடக்க முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது மாநகரில் முக்கியமான பகுதி மாநகராட்சி கண்டுகொள்ளாதது ஏன்?
மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி கட்டணங்களை வசூல் செய்ய வாகனங்கள் மூலம் பிரசாரங்கள் மேற்கொள்ளும் மாநகராட்சி பொதுமக்களின் மீது அக்கறை கொள்வதில்லை.
இந்த வழியாக செல்லும் அதிகாரிகளும் ஏன் இதனை கண்டு கொள்வதில்லை? என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
விபத்துக்கள் ஏற்படும் முன்பு இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்ட நிருபர் N.T.சரவணன்
No comments:
Post a Comment