நாகர்கோவில் டாக்டர் அகர்வால் ஸ் கண் மருத்துவமனை சார்பாக 30- வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 4 September 2024

நாகர்கோவில் டாக்டர் அகர்வால் ஸ் கண் மருத்துவமனை சார்பாக 30- வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி

  


நாகர்கோவில் டாக்டர் அகர்வால் ஸ் கண் மருத்துவமனை சார்பாக 30- வது தேசிய கண் தான விழிப்புணர்வு மனித சங்கிலி - 


ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 25-முதல் செப்டம்பர் 8 வரை தேசிய அளவில், கண் மருத்துவமனைகளும், அதனை சார்ந்த கண் வங்கிகளும் கண் தான விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடித்து வருகிறது


நாகர்கோவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை முன்பாக மாணவ மாணவியர்கள் மற்றும் 500 பேருக்கு மேற்பட்டோர் பெரும் திரளாக கலந்துகொண்டு மாபெரும் கண்தான விழிப்புனர்வு மனித சங்கிலி நடத்தினர்.


இந்நிகழ்வில் தலைமை விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் நிஷாந்த் கிருஷ்ணா  அவர்களும் சிறப்பு விருந்தினராக நாகர்கோவில் மாநகராட்சி சுகாதார அலுவலகர் டாக்டர் ராம்குமார்  மற்றும்.கோபால் சுரேந்திரன் மருத்துவ சேவைகள் கிம்ஸ்  ஹெல்த்   &தலைவர் ஆதர்ஷ் வித்யா கேந்திரா பள்ளி மற்றும் ஸ்ரீ ஐயப்பா கல்லூரி மகளிர் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி, மனித சங்கிலியை தொடங்கி வைத்து பேசினார்கள். நாகர்கோவில் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் சிரில் ஜோஸ் அவர்கள் மற்றும் முதன்மை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர்  .  ஐஸ்வர்யா தேவி கண் தானம் செய்வதின் அவசியத்தை குறித்தும் உலக அளவில் கருவிழி பார்வை இழப்பு தடுப்பதை குறித்தும் விரிவாக பேசினார். நமது மருத்துவமனையில் உலக தரத்தில் தையல் இல்லா கருவிழி மாற்று அறுவை சிகிச்சை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய உபகரணங்களுடன் உதவியுடன் செய்யப்படுகிறது என்பதையும் மேற்கோள் காட்டினார்


மனித சங்கிலியில், நாகர்கோவில் ஆதர்ஷ் வித்யா கேந்திராபள்ளி மற்றும் நாகர்கோவில் ஸ்ரீ ஐயப்பா பெண்கள் கல்லூரி கல்லூரி மாணவ, மாணவியர்கள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும் விழிப்புணர்வு வாசகங்களை கூறியும் மனித சங்கிலியில் பங்கேற்றனர்.


நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேலாளர் . வெங்கடேஷ் மற்றும் மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment