கன்னியாகுமரி கடற்கரையில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 19 September 2024

கன்னியாகுமரி கடற்கரையில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு


கன்னியாகுமரி கடற்கரையில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க கருத்துக் கேட்புக் கூட்டம் அறிவிப்பு


கன்னியாகுமரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஏற்கெனவே நடைபெற்ற தாதுமணல் கொள்ளையால் மீனவ கிராமங்களில் வசிக்கும் பலருக்கும் புற்றுநோய், சிறுநீரகப் பாதிப்பு, தைராய்டு, மலட்டுத் தன்மை, தோல்நோய், ஆஸ்துமா, கருச்சிதைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. முழுக்க முழுக்க கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டும், நடந்து கொண்டும் வேலை பார்க்கும் மீனவர்களுக்கு கதிரியக்கம் நிறைந்த மணற்பகுதியை அகழ்வதால் கதிரியக்க பாதிப்பு அதிகம் நேர்கிறது. கூத்தன்குழி, மணவாளக்குறிச்சி ஆகிய பகுதிகளில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் அதிகம் பேர் இருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.


புவி அறிவியல் துறையின் ஆய்வறிக்கையின்படி கன்னியாகுமரி மாவட்டத்தின் 69.06 கி.மீ. கடற்கரை நீளத்தில் 44.56 கி.மீ. கடற்கரை அரிப்புக்குள்ளாகி வருவதாகத் தெரியவந்துள்ளது. குறிப்பாக இனயம், புத்தன்துறை, மிடாலம், மனவாளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களின் கடற்கரைகளில் கடலரிப்பு தீவிரமாக நடைபெற்று வருவதாக இந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. இப்படியான பகுதிகளில் அணுக் கனிம சுரங்கம் அமைப்பது முற்றிலும் தடை செய்யப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.


தமிழ்நாட்டை ஒன்றிய அரசு ஏற்கெனவே அணுக்கழிவுக் குப்பைத் தொட்டிபோல பாவித்து, பல்வேறு அணுமின் திட்டங்களை செயல்படுத்த முனைகிறது. அணுக்கழிவுகளையும் கூட கூடங்குளத்திலேய வைக்க முடிவெடுத்துள்ளது. தற்போது அணுக் கனிம தாதுக்களை அகழ்ந்தெடுக்க சுரங்கம் அமைக்கவும் முயற்சிகள் மேற்கொள்வது கடும் கண்டனத்திற்குரியது

No comments:

Post a Comment