மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு" - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 21 September 2024

மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு"


மாவட்ட காவல்துறை சார்பில் "பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு" என்ற தலைப்பில் நடைபெற்ற குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற குழுவினரை பாராட்டி பரிசுகள் வழங்கிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்


கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்


சுந்தரவதனம் அவர்கள் தலைமையில், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் நோக்கில் "பெண்களுக்கான இணையவெளி பாதுகாப்பு" என்ற தலைப்பில்  குறும்பட போட்டியானது கடந்த மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று(20.09.2024) குறும்பட போட்டியில் வெற்றி பெற்ற குழுவினருக்கு பரிசளிக்கும் நிகழ்வானது  இந்துக் கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது.


இந்நிகழ்வில் உரையாற்றிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்  சைபர் குற்றங்கள் நடைபெறுவது குறித்தும் சைபர் குற்றங்களில் சிக்கிக்கொண்டால் அதிலிருந்து மீண்டு வரும் வழிமுறைகள் குறித்தும் பேசினார்கள் . சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இக்குறும்பட போட்டியின் நோக்கம் என கூறினார். 


மேலும் சிறந்த முறையில் குறும்படம் எடுத்த எட்டு குழுக்கள் தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு 2 குழுவினருக்கும்  இரண்டாம் பரிசு 3 குழுவினருக்கும் மூன்றாம் பரிசு  3 குழுவினருக்கும்  பரிசு தொகை மற்றும் சான்றிதழ்   வழங்கினார்கள். போட்டியாளர்களின் சிறந்த முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தார்கள்.


இதில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் திரு.லலித் குமார்,சைபர் குற்ற பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மோகன்தாஸ்,பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன் மற்றும் தனிப்பரிவு காவல் ஆய்வாளர் திரு.பெர்னார்ட் சேவியர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment