சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 14 October 2024

சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து

 

IMG-20241014-WA0019

சப் இன்ஸ்பெக்டருக்கு கத்தி குத்து 


குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள இரயுமன் துறை பகுதியில் கடல் அலையின் வேகத்தை தடுப்பதற்காக கடற்கரையில் தூண்டில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் கற்கள் கொண்டு செல்லப்படுகிறது.       இந்நிலையில் நேற்று இரவு தொலையாவட்டம் பகுதியில் தூண்டில் வளைவு அமைக்கும் பணிக்காக கடலுக்கு கற்கள் கொண்டு சென்ற நான்கு லாரிகளை  அப்பகுதியை  சேர்ந்த உடல் நிலை பாதிக்கப்பட்ட செல்வராஜ் என்ற கழுதைராஜன் (58) என்பவர் ஜீப்பால் வழிமறித்து லாரியில் உள்ள கண்ணாடிகளை உடைத்துள்ளார். உடனடியாக இது குறித்து கருங்கல் போலிஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சப் இன்ஸ்பெக்டர் பென்ஸ்சன் மற்றும் போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அப்போது உடல்நிலை பாதிக்கப்பட்ட செல்வராஜ் நிர்வாணமாக லாரிகளுக்கு இடையில்  சாலையில் நிறுத்தப்பட்ட ஜீப்பில் அமர்ந்திருந்தார். அப்போது சப் இன்ஸ்பெக்டர் பென்ஷன் ஜீப்பு எடுத்துச் செல்லுமாறு கூறியதால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் அவர் கையில் வைத்திருந்த கத்தியால் எஸ் ஐ யை தாக்கியுள்ளார். இதில் அவருக்கு கையில் காயம்  ஏற்பட்டதால் தொடர்ந்து பென்ஷன் கருங்கல்  அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் செல்வராஜை அவரது உறவினர்கள் பிடித்து வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment