தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள கோரிக்கை
தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்வோர் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் சிறப்பு இரயில்களில் டிக்கெட் அனைத்தும் தீர்ந்து விட்டதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்து உள்ளதால் சென்னையில் இருந்து நாகர்கோவில் வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் பயணிகள் தனியார் பேருந்துகளை நம்பி செல்லும் கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதை பயன் படுத்தி தனியார் பேருந்துகளில் பயண கட்டணத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்தி உள்ளனர். எனவே ஏழை நடுத்தர பயணிகள் மிகவும் பாதிக்கப் படுகிறார்கள். குறிப்பாக சென்னையில் இருந்து புறப்பட்டு செல்லும் இரயில்களில் தென் மாவட்டங்களுக்கான பயணிகள் எண்ணிக்கை தான் அதிகம்.ஆனால் போதிய அளவில் இவ்வழி தடங்களில் இரயில்கள் இயக்க படவில்லை. அதனால் தென் மாவட்டங்களுக்கு செல்லும் இரயில் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் தள்ளப்பட்டு ஏமாற்றத்திற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர்.இந்த நிலையை மாற்ற வேண்டும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்து இருபத்தி நான்கு மணிக்குள் காத்திருப்போர் பட்டியல் அடிப்படையில் கூடுதல் சிறப்பு இரயில்களை பயணிகள் நலன் கருதி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் கேட்டுக் கொண்டார்.

No comments:
Post a Comment