தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 23 October 2024

தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

 தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் விடுத்துள்ள அறிக்கை

பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி பொற்கால ஆட்சி என்று திராவிட கழகத்தை தோற்றுவித்த பெரியாரே பாராட்டினார்.ஆனால் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி  என்பவர் காமராஜர் வரலாறை தெரியாத யாரோ எழுதிய சில கருத்துக்களை வைத்து காமராஜர் தனது சொந்த நிதியிலா பள்ளி கூடங்களை திறந்தார் என்று வாய்க்கு வந்தபடி பேசியுள்ளார் இது மிகவும் கண்டனத்திற்கு உரிய வேதனையான செயலாகும் மேலும் தமிழகத்தில் அன்றைய காலகட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கூடங்களையும் காமராஜர் திறந்தார்.என்று கூறி விட்டு மூதறிஞர் ராஜாஜி மூடிய பள்ளிகளை மட்டுமே திறந்தார் என  பிற்போக்கு தனமான கீழ் தரமான ஒரு கருத்தை பேசி  தற்போதைய இளம் தலை முறையினர்களிடம் தவறான முறையில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற கெட்ட நோக்கில் பேசியுள்ளார் திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி.கிராமங்கள் தோறும் பள்ளிகளை திறந்து ஏழை மாணவ மாணவிகளை படிக்க வைத்த அந்த ஏழை பங்காளனின் தன்னலமற்ற தியாகத்தை இவரை போன்ற அரைகுறை அரசியல் வாதிகள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை. கூட்டணியில் இருந்தாலும் எங்கள் சித்தாந்தம் வேறு உங்கள் சித்தாந்தம் வேறு தமிழக அரசியலில் பெருந்தலைவர் காமராஜர் என்ற ஒரு புனிதமான தலைவரை அவரது சேவையை இன்னும் எத்தனை தலை முறைகள் வந்தாலும் மறைக்க முடியாது என்பதை திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி போன்றோர் புரிந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.எனவே வரலாறு தெரியாமல் பேசி விட்ட கருத்திற்காக திமுக மாணவரணி தலைவர் ராஜீவ்காந்தி பெருந்தலைவர் காமராஜர் பக்தர்களிடம் வருத்தம் தெரிவிக்க வேண்டும்.அது தான் அவரது எதிர்கால அரசியல் வளர்ச்சிக்கு துணை நிற்கும் என்பதை தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு சார்பில் தெரிவித்தார்


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment