தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி...பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி...பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்

 


தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நடைபெறும் சைபர் கிரைம் மோசடி...பொதுமக்கள் விழிப்புடன் இருக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள்


கன்னியாகுமரி மாவட்டம் சைமன் நகரை சேர்ந்த நபரின் மனைவி சென்னையில் வசித்து வருவதாகவும் தற்போது தனது மகன் மேற்ப்படிப்பிற்காக அயர்லாந்து சென்றுள்ளதாகவும் கடந்த  தேதியன்று தனது மனைவிக்கு தெரியாத ஒரு வெளிநாட்டு எண்ணிலிருந்து வாட்ஸ் அப் அழைப்பு வந்ததாகவும் அதில் பேசிய நபர் தான் Indian Embassy ல் பணிபுரியும் அதிகாரி எனவும் தங்களது மகன் மீது குற்றச்சாட்டு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தனது மகன் குரலில் அழுவதைப் போன்ற ஆடியோ பதிவு ஒன்றை போட்டு காட்டி அவர்களை நம்பவைத்து, மகனை விடுவிக்க வேண்டுமென்றால் அவர்கள் கேட்கும் பணம் அனுப்பி தரும்படி கூறி மிரட்டியதாகவும் மனைவியும் பயந்து தனது Google Pay ல் இருந்து 85,000 ரூபாயும் மீண்டும் தனது Google Pay வரம்பு தாண்டிய போது தனது உறவினரின் Google Pay ல் இருந்து 90,000 ரூபாயும் அந்த எண்ணிற்கு அனுப்பி வைத்ததாகவும் பின்னர் தனது மகனுக்கு அழைத்து பேசிய போதுதான் இது மோசடி என்று தெரிய வந்ததாகவும் புகார் மனு கொடுத்துள்ளார்.


தற்போது இதுபோன்று AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நமக்கு தெரிந்த நபர்களை போலவோ அல்லது குடும்ப உறுப்பினரை போலவோ குரலில் பேசி புகைப்படம் மற்றும் வீடியோ ஆகியவற்றை வைத்து மிரட்டி பணம் பறித்தல் நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் விழிப்புடன் இருந்து இது போன்ற சைபர் கிரைம் மோசடிகளில் சிக்காமல் தற்காத்து கொள்ள மாவட்ட காவல்துறை சார்பாக கொண்டனர்

No comments:

Post a Comment