அகஸ்தீஸ்வரம் தேரிவிளையில் மது ஒழிப்பு மாநாடு பி. டி. செல்வகுமார் தொடங்கிவைத்தார் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 5 October 2024

அகஸ்தீஸ்வரம் தேரிவிளையில் மது ஒழிப்பு மாநாடு பி. டி. செல்வகுமார் தொடங்கிவைத்தார்

 


அகஸ்தீஸ்வரம் தேரிவிளையில் மது ஒழிப்பு மாநாடு   பி. டி. செல்வகுமார் தொடங்கிவைத்தார்


தென்தாமரைகுளம் கலப்பை மக்கள் இயக்கம் சார்பில்   தென் தாமரைகுளம் பேரூராட்சி தேரிவிளையில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய அளவிலான மதுஒழிப்பு மாநாடு நடந்தது. இந்நிகழ்வில்  பெண்கள்,மாணவிகள் என 200 பேர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி  கலப்பை மக்கள் இயக்க  நிறுவனர்  பி.டி.செல்வகுமார் பேசியதாவது. பெண்கள் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம். அவர்களின் திறன் மேம்பட அனைவரும் உதவி புரியவேண்டும். நாங்கள் வாரம் தோறும் தொழில் தொடங்கவும் வளர்ச்சிக்காகவும் தன்னம்பிக்கை தந்து புத்துணர்வு முகாம் நடத்தி வருகிறோம். அதேபோல் மது ஒழிப்புக்காக தெருக்கள் தோறும் விழிப்புணர்வுகள் முகாம் நடத்துகிறோம்.. படிக்கிற பெண்கள் தன்னம்பிக்கை பெற மேம்பாடு திறன் வளர்ச்சி கற்றுக் கொடுக்கிறோம். பெண்கள் தேசத்தின் கண்கள் என்று கலப்பை மக்கள் இயக்க தலைவர் பேசினார். விழாவில் மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிர் அணி துணை தலைவர் செல்வ மெர்லின், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய செயலாளர் செந்தில் மோகன், அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவர்  பாபு, செயலாளர் சுடலை, அமைப்பாளர் பால்துரை,  மேலச்சந்தையடி சிஎஸ்ஐ ஆலய டீக்கனார் ரெஜினால்டு, செல்லப்பா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோ மனோகரன், நல்லாசிரியர் தங்கமுத்து, ஆசிரியர் பொன்ராஜ், விஜயன், மற்றும்  திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.


கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்

No comments:

Post a Comment