குளச்சல் : விபத்தில் சிக்கி வாலிபர் உயிரிழப்பு
குளச்சல் அருகே உள்ள வாணியகுடி பகுதியை சேர்ந்தவர் சாஜன் (21). இவர் பைக் மெக்கானிக்காக குளச்சலில் பணியாற்றி வருகிறார். நேற்று கருங்கல் அருகே நீர்வக்குழி என்ற பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது விபத்தில் சிக்கி கீழே விழுந்து படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனை அடுத்து பொதுமக்கள் கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சாஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர். என்.சரவணன்
No comments:
Post a Comment