குமரி பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
உபி மாநிலம் சம்பல் பகுதியில் ஷாஹி ஜுமா மஸ்ஜித் அமைந்திருக்கும் இடத்தில் இந்துக் ஒன்று இருந்தது என்று பொய் வழக்கு ஒன்றைப் போட்டு.அது தொடர்பாக நில அளவீடு செய்யப் போகிறோம் என்கிற பெயரில் திட்டமிட்டு ஒரு கலவரத்தை நடத்தி அப்பாவி இளைஞர்கள் ஐந்து பேரை கொன்று படுகொலை நடந்திருக்கிறது யோகி ஆதித்ய நாத் அரசு.இப்போது இதே பாணியில் ராஜஸ்தான் அஜ்மீர் தர்காவிலும் பிரச்சினையை கிளம்புகிறார்கள். வழிபாட்டுத்தலம் சட்டம் 1991 எனும் சட்டத்தை அவமதித்து நாட்டில் வன்முறையைக் கிளறக் கூடாது என்று கோருகிறோம் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் விவசாய பிரிவு மாநில பொதுச் செயலாளர் ஆர்.எஸ்.ராஜன்,சுப.உதயகுமார்,குமரி ரசூல்,எஸ்டிபிஐ மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் உசேன்,கன்னியாகுமரி மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் தலைவர் ரவி,குறும்பனை மெர்லின்,இடலை சாகுல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:
Post a Comment