நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை - குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட மினிபஸ், ஆட்டோ, மற்றும் சொகுசு கார் பறிமுதல் - ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.
சுந்தரவதனம். அவர்கள் உத்தரவின் பேரில் நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் .லலித் குமார்,அவர்களின் மேற்பார்வையில், நாகர்கோவில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் சார்பு ஆய்வாளர்கள் .சுமித் ஆல்ட்ரின், .பாலசெல்வன் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் பகுதியில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட மினிபஸ் ஆட்டோ மற்றும் ஒரு சொகுசு கார் உள்ளிட்ட 3 வாகன ஓட்டுநர்கள் மீது குடிபோதை வழக்கு பதிவு செய்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விபத்து தடுப்பு நடவடிக்கையாக, குடிபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகன ஓட்டுநர்களின் ஓட்டுநர் உரிமங்களை, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிவுற்ற பின் RTO அலுவலகம் மூலம் ரத்து செய்ய நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறையினர் மூலமாக பரிந்துரை செய்யப்பட உள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment