9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 1 December 2024

9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல்

IMG-20241201-WA0017

9-ம் வகுப்பு மாணவன் மீது தாக்குதல் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், உடற்கல்வி பயிற்சியாளர் இடமாற்றம்



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சேது இலக்குமி பாய் (சின்ன) எஸ்எல்பி அரசு உயர்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் சரிவர விளையாடததால், பகுதி நேர உடற்பயிற்சி ஆசிரியர் லிங்கேஸ்வரன், பிரம்பால் தாக்கியுள்ளார், இதில் மாணவர் மயங்கி விழுந்து சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பான புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள்,இந்த தகவலை கல்வி அலுவலகத்திற்கு தெரிவிக்காத தலைமையாசிரியர்.டார்லின் மெரியட், மற்றும் மாணவனை தாக்கிய உடற்பயிற்சி ஆசிரியர் லிங்கேஷ்வரன் ஆகியரை கல்வி அதிகாரிகள் இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.



கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்

No comments:

Post a Comment