கிறிஸ்துமஸ் நாளான நேற்று கீழ கடியப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர் அந்தோணி ராஜ் மகன் ஹார்லின் டேவிட்சன் (15).நண்பர்களுடன்
வீட்டருகே உள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஹார்லின் டேவிட்சன் உட்பட மூன்று சிறுவர்களை திடீரென ராட்சத அலை இழுத்து சென்றது.
இதனைப் பார்த்த மீனவர்கள் உடனே கடலில் குதித்து இரண்டு சிறுவர்களை காப்பாற்றினார்கள். ஆனால் ஹார்லின் டேவிட்சனை மீட்க முடியவில்லை. தீவிர தேடுதலுக்கு பிறகு ஹார்லின் டேவிட்சனை பிணமாக மீட்டனர். இது குறித்து குளச்சல் மரைன் போலீசருக்கு தகவல் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர்
என். சரவணன்
No comments:
Post a Comment