கன்னியாகுமரி மாவட்டத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்காக EAGLE PATROL இருசக்கர வாகன ரோந்தை தொடங்கி வைத்த திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள்.
கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படையில் திருநெல்வேலி சரக காவல்துறை துணை தலைவர் முனைவர் திரு.மூர்த்தி அவர்கள் காவல்துறையில் EAGLE PATROL இருசக்கர வாகன ரோந்து பணியை தொடங்கி வைத்தார்கள். முதற்கட்டமாக எட்டு வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி வைக்கப்பட்டது
இந்த EAGLE PATROL ரோந்து காவலர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மதியம் 2 மணி முதல் இரவு 10:00 மணி வரையும் சுழற்சி முறையில் நகர பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பிற்காக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ரோந்து மேற்க்கொள்வார்கள் GPS பொருத்தப்பட்ட இந்த EAGLE PATROL வாகனங்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை மூலம் கண்காணிக்கப்படும் இந்நிகழ்வின் போது கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் உடனிருந்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment