கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் தொழில் போட்டியில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அதே பகுதியை சேர்ந்த வினிஷ் என்பவர் சிறையில் இருந்து கடந்த 5 ம் தேதி பிணையில் வெளி வந்த நிலையில் சிறைசாலை வாசலில் வைத்தே மற்றொரு வழக்கு பதிந்து வினிஷை கைது செய்தது பூதப்பாண்டி போலீஸ். தன் மகனை பொய் வழக்கில் மீண்டும் கைது செய்ததாக கூறி அவர் தாய் மற்றும் உறவினர்கள் பூதப்பாண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து அன்றே போராட்டமும் நடத்தினார்கள். இந்நிலையில் கைது செய்யப்பட்ட வழக்கில் இருந்தும் பிணையில் வெளி வந்த வினிஷ் விரக்தியில் ஊரில் உள்ள சுடுகாட்டிற்கு சென்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பூதப்பாண்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment