இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவீரன் பகவத்சிங் அவர்களின் 115 வது பிறந்த தினவிழா. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 28 September 2022

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவீரன் பகவத்சிங் அவர்களின் 115 வது பிறந்த தினவிழா.

மாவீரன் பகவத்சிங் அவர்களின் 115 வது பிறந்ததினவிழா நாகர்கோவில் மீனாட்சிபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தா.சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.


இந்த பிறந்தநாள் நிகழ்வில் Cpi மாநகர செயலாளர் R.இசக்கிமுத்து அவர்கள் தோழர் பகவத்சிங் படத்திற்கு மாலை அணிவித்தார். த.க.இ.பெ.ம மாநில தலைவர் சி.சொக்கலிங்கம்,இந்திய தேசிய மாதர் சம்மேளனம் மாவட்ட அமைப்பாளர் R.செல்வராணி, அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநிலதுணை செயலாளர் S.சுந்தரம் முன்னிலை வகுத்தனர்.
 

Cpi மாவட்டக்குழு உறுப்பினர் R.K.ஸ்ரீகுமார் அவர்கள் மாவீரன் பகவத்சிங் போன்று தொப்பி அணிந்து தோழர்களை உற்சாகப்டுத்தினார். மேலும் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் வில்சன்,த.க.இ.பெ.ம குமரி மாவட்ட பொருளாளர் ந.நாகராஜன், Cpi நாகர்கோவில் மாநகர பொருளாளர் M.நாகராஜன் கருத்துரை வழங்கினார்கள்.இனிப்பு வழங்கி நிகழ்வுகள் நிறைவு செய்யப்பட்டது.

No comments:

Post a Comment