கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே புலியூர் குறிச்சி பகுதியில் கல்குளம் வட்ட வழங்கல் அலுவலர் சுனில்குமார், தனி வருவாய் ஆய்வாளர் ஷாமினி, ஓட்டுநர் மரியதாஸ் மற்றும் அலுவலக பணியாளர்கள் ரோந்து மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகிக்க இடமாக வந்த சொகுசு கார் ஒன்றை நிறுத்த முயற்சித்தபோது அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றது. அதிகாரிகள் வாகனத்தை தூரத்தில் இதைதொடர்ந்து அந்த வாகனம் கண்ணிமைக்கும் நேரத்தில் கல்குளம் வட்டம் புலியூர்குறிச்சி வழியாக உதயகிரி கோட்டை மணலி அழகியமண்டபம் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் கடந்து விளவங்கோடு வட்டம் ஞாறம் விளை என்னுமிடத்தில் வைத்து மடக்கிப் பிடித்தனர் அப்போது ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடினார் பின்னர் அந்த சொகுசு காரை சோதனை செய்ததில் சுமார் 2 டன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரிசியை கேரள மாநிலத்திற்கு கடத்துவதற்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்துடன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

No comments:
Post a Comment