குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் பொது மக்களின் பிரச்சனைகள் குறித்த மனுக்களை நாள் தோறும் பெற்று அது தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருகிறார், இன்று வழக்கம் போல் பொது மக்கள் தங்கள் பிரச்சனைகள் குறித்த மனுக்களை அளிக்க வந்திருந்தனர்.
அப்போது புத்தன்துறை பகுதியை சேர்ந்த சிவசங்கர் (38) என்ற மாற்றுத்திறனாளி புகார் மனு ஒன்றினை அழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.
புகார் மனு அளிக்க வந்திருப்பவர் மாற்றுத்திறனாளி என அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து கீழே இறங்கி வந்து அவர் இருக்கும் இடத்திற்கே சென்று மனுவினை வாங்கி மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
No comments:
Post a Comment