நாகர்கோவில் - காவல்கிணறு 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் டோல்கேட் 24ம் தேதி முதல் இயங்கும். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 19 September 2022

நாகர்கோவில் - காவல்கிணறு 4 வழிச்சாலையில் திருப்பதிசாரம் டோல்கேட் 24ம் தேதி முதல் இயங்கும்.

நாகர்கோவில் - காவல்கினறு இடையிலான 4 வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் உள்ள சுங்க சாவடி வருகிற 24-ம்தேதி முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


நாகர்கோவில்-காவல் கிணறு 4 வழிச்சாலையில் திருப்பதிசாரத்தில் உள்ள டோல்கேட் செப்டம்பர் 24-ம் தேதி முதல் இயங்கும். கார், ஜீப், வேன் சென்று வர ரூ.60 கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குமரி. மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் மந்த கதியில் நடந்து வரு கின்றன. இந்த நிலையில் நீண்ட போராட்டத்துக்கு பின், நாகர்கோவில் காவல்கிணறு இடையிலான நான்கு வழிச்சாலை முடிக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் திருப்பதிசாரம் அருகே டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது.


இந்த டோல்கேட்டில், வருகிற 24ம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என நெடுஞ்சாலைத் துறை ஆணையம் அறிவித்துள்ளது. எனவே அன்று முதல் சாலை முறைப்படி திறக்கப்பட்டு வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படும் என தெரிகிறது. டோல் கேட்டுக்கான கட்டண விபரங்களும் அறிவிக்கப் பட்டுள்ளன.


அதன் படி கார் ஜீப் வேன் அல்லது இலகுரக வாகனம் ஒரு வழிமுறை பயணம் செய்ய கட்டணம் ரூ.40ம், வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ 60ம், வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு வழிமுறையை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் ரூ.1,310, குமரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட வாக னங்களுக்கான ஒரு வழி முறை பயண கட்டணம் ரூ.20ம்


இவகுரக வணிக வாகன வகை, இலகு

பொருள் வாகனம் அல்லது மினி பஸ் போன்றவை ஒருமுறை பயணம் செய்ய ரூ.65ம் வாகனம் அதேநாள் திரும்ப பயணம் செய்ய ரூ 95ம் வாகனம் ஒரு மாதத்திற்கு (50தடவை) ஒருவழி முறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் ரூ.2115, குமரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய் யப்பட்ட வணிக வாகனங்களுக்கான ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.30,


பஸ் அல்லது டிரக் ஒரு வழிமுறை பயணம் செய்ய ரூ.135, வாகனம் அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.200, ஒரு மாதத்திற்கு 50 தடவை ஒரு வழிமுறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு கட்டணம் ரூ.4435 குமரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட பஸ், டிரக் வாகனங்களுக்கு ஒருவழி முறை பயண கட்டணம் ரூ.65


மூன்று அச்சு கொண்ட வணிக வாகனங்கள் ஒரு முறை பயணிக்க ரூ.145. அதே நாளில் திரும்ப பயணம் செய்ய ரூ.220, வாகனம் ஒரு மாதம் 50 தடவை ஒருவழிமுறை பயணம் செய்ய ரூ.4835. குமரி மாவட்ட எல்லைக்குள் பதிவு செய்யப்பட்ட மூன்று அச்சு கொண்ட வணிக வாகளங்களுக் கான ஒருவழி முறை பயணத்திற்கு ரூ.75, 


பல அச்சுகள் கொண்ட கட்டுமான இயந்திரங்கள் அல்லது மண் ஏற்றி செல்லும் வாக னம் அல்லது பல அச்சு கள் கொண்ட (4 முதல் 6 அச்சுகள் ) உள்ள வாகனம் ஒருமுறை பயணம் செய்ய ரூ.210, வாகனம் அதேநாளில் திரும்ப பயணம் செய்ய ரூ 315. வாகனம் ஒரு மாதத்திற்கு 50 தடவைக்கு மேல் ஒருவழிமுறை பயணம் செய்ய வழங்கப்படும் மாதாந்திர கடவுச்சீட்டு ரூ.6950, குமரி மாவட்ட எல்லைக்குள்  இந்த வாகனங்கள் பதிவு செய்யப்பட்டி ருந்தால் ஒருவழிமுறை பயண கட்டணம் ரூ.105, 


வணிக உபயோகம் இல்லாத உள்ளூர் வாகனங்களுக்கு 2022-23 ம் ஆண்டு விதிக்கப்படும் மாதாந்திர பாஸ் கட்டணம் ரூ.315 ஆகும். நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் டோல் கேட் அமைந்துள்ளது. 60 கி.மீ. இடைவெளியில் தான் டோல் கேட் இருக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது. ஆனால் 45 கி.மீ. இடைவெளியில் திருப்பதிசாரத்தில் டோல்கேட் அமைத்திருப்பது, வாகன ஓட்டிகளை கடும் அதிருப்தி அடைய செய்துள்ளது. 

No comments:

Post a Comment