ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 5 September 2022

ஓணம் பண்டிகையையொட்டி பத்மநாபபுரம் அரண்மனையில் அத்தப்பூ.

IMG_20220905_224026_014
குமரி மாவட்டம் பத்மநாபபுரம் அரண்மனையில் ஓணம் பண்டிகையையொட்டி அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடப்பட்டது.


கேரள மாநிலம் மட்டுமின்றி மலையாள மொழி பேசும் மக்கள் வாழும் அனைத்து பகுதிகளிலும் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.


அதன்படி, கேரள அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பத்மநாபபுரம் அரண்மனையில் நேற்று ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது, அரண்மனை பூமுகத்தில் குத்து விளக்கை அரண்மனை அதிகாரி அஜித்குமார் ஏற்றி வைத்தார்.


விழாவின் போது அரண்மனை பெண் ஊழியர்கள் பல வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். அப்போது ஊழியர் ஒருவர் மாவேலி மன்னர் வேடம் அணிந்து பார்வையிட்டார்.
 

பின்னர் திருவாதிரை நடனம், பாட்டுபாடுதல், ஊஞ்சல் ஆட்டம், விளையாட்டு போட்டிகள், ஓண சத்தியா விருந்து ஆகியவைகள் நடைபெற்றன.
 

இதில் கலந்து கொண்ட அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் ஒண வேஷ்டி, சேலை அணிந்து குடும்பத்தினரோடு கலந்துகொண்டனர், இதையொட்டி அரண்மனை வண்ண விளக்குகளால் அலங்கரிக்கபட்டுள்ளது.
 

இரவில் மின்னொளியில் ஜொலிக்கும் அரண்மனையின் அழகை காண்பதற்கு 8-ந்தேதி வரை பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment