கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலை அடுத்த பகுதியில் அமைந்துள்ளது கோணங்காடு தூய சவேரியார் ஆலயம். இந்த ஆலயத்தில் ஒரு அமைப்பாக உடையார்விளை புனித அன்னை தெரசா அன்பியம் செயல்பட்டு வருகிறது.
இதில் சுமார் 80 குடும்பங்கள் உள்ளன.இன்று அன்னை தெரசா நினைவு நாளை முன்னிட்டு அன்பியத்தின் 17 வது ஆண்டுவிழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தூய சவேரியார் ஆலய பங்குத்தந்தை அருட்பணி ஜெய சுந்தர் சிங் தலைமை வகித்தார்.பங்கு பேரவை துணைத்தலைவர் மரிய லாசர் வாழ்த்துரை வழங்கினார்.
அன்பிய தலைவர் லதா மேரி, துணைத் தலைவர் செல்வராஜ், செயலர் அயறின் விமலா, துணைச்செயலர் ராஜேஸ்வரி, பொருளர் சுமித்திரா மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment