சிறப்பு விருந்தினராக பயிற்சி பெறுபவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் பாரம்பரிய வாழ்வியல் முறையை பல வருடங்களாக பட்டி தொட்டிகள் எல்லாம் பறை சாற்றுகின்றவறும் கன்னியாகுமரி, திருச்செந்தூர், ராமேஸ்வரம், கோவா, மும்பை போன்ற கடலோரங்களில் தூய்மை பற்றி எடுத்துரைத்து களப்பணி பொதுமக்களுடனும் மாணவ, மாணவிகளுடனும் பல வருடங்களாக தொடர்ந்து செய்து வருகின்ற சமூக சேவகரும் மீண்டு எழும் குமரி என்ற அமைப்பினால் ஓகி புயல் மீட்பு பணியில் அர்ப்பணிப்போடு பணி செய்தமைக்காக 10 கடல் சார்ந்த சகோதரர்களுக்கும் கரை பகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே சமூக சேவகரான மருத்துவர் நாகேந்திரன் கூறுகையில், பயிற்சி பெறுகின்ற நீங்கள் அனைவரும் உங்களால் இயன்ற அளவு பிளாஸ்டிக் (நெகிழி) பயன்பாட்டை முற்றிலும் குறைப்பதோடு மக்கும் குப்பைகளாக மாறுகின்ற பொருட்களை அதிகம் நம் வாழ்க்கையில் பயன்படுத்துவதோடு நீர் நிலைகளிலும், கடல்களிலும் கழிவு எண்னை கழிவு பொருட்கள் மற்றும் நச்சு பொருள்களை கலக்காமல் பாதுகாப்பது நமக்கும் நம்மை சார்ந்த உயிரினங்களுக்கும் இன்றியமையாதவை.
சுற்றுப்புற சூழல்களில் மரங்களை நடுவதன் மூலமும் இயற்கை வளங்களை பேணுவதன் மூலமும் நாமும் நமது சந்ததிகளும் இயற்கையோடு நீடூடி நல்வாழ்வு வாழ வழிவகுக்கும் என்று கூறி முன்னாள் மாவட்ட கல்வி அதிகாரி ஜெயக்குமார் அவர்கள் முன்னிலையில் நடவு செய்யப்பட்ட மரங்களை பாத்தி அமைத்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பல்வேறு கடற்கரைகளில் மரங்கள் நடவு செய்ததையும் ஓகி நேரத்தில் மாண்புமிகு தமிழ்நாடு கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் முதன்மைச் செயலர், மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் ஓகி புயலால் அழிந்த மரங்களுக்கு மாற்று ஏற்பாடாக மரங்கள் நடவு செய்து இயற்கை வளங்களை பாதுகாக்கப்பட வேண்டும் என்று மருத்துவர் நாகேந்திரன் மனு அளித்து கவர்னரிடம் கூறியதை நினைவு கூர்ந்தார் ஓகி புயலில் இந்தப் பள்ளி வளாகங்கள் மற்றும் சாலைகள் மீட்பு நிவாரண பணி செய்வதற்கு என்னோடு பல இளைஞர்களும் செயல்பட்டனர் அதுபோல நீங்களும் பேரிடர் காலங்களில் நிவாரண பணி செய்வதற்கான தகுதி உடையவர்களாகவும் உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என கூறினார்.
இதில் தேசிய வீரர்கள் ஆதி விஷ்ணுகுமார் ஜெயின் ஏ ஹில் தன்னோடு பொதுப்பணியில் ஈடுபட்ட ஏ. ஜாண் நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை செய்து இருந்தார்.

No comments:
Post a Comment