கன்னியாகுமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்கணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் பார்சல் சர்வீஸ் மற்றும் கொரியர் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அறிவுறுத்தல்களை வழங்கினார் .
அதில் கஞ்சா விற்பனை பற்றி தகவல் தெரிந்தால் ஏற்கனவே மாவட்டத்தில் அறிமுகப்படுத்தியுள்ள 7010363173 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் எனவும், கொரியரில் பார்ஸல் அனுப்ப வருபவர்களிடம் எதாவது ஒரு ஆவண நகல் (ஆதார், ஓட்டுநர் உரிமம்) வாங்கி கொண்டு பார்சலை பெற்று கொள்ளுங்கள் என்றும், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பார்சல்களை நன்கு கண்காணித்து அதில் கஞ்சா மற்றும் வேறு ஏதேனும் போதை பொருட்கள் உள்ளதா என்பதை பரிசோதித்து உரியவருடன் வழங்க வேண்டும் எனவும், பார்சல்களில் இருக்கும் முகவரி போலியான முகவரியாக இருந்தாலோ, மேலும் சந்தேகத்திற்குகிடமாக ஏதேனும் பார்சல்கள் இருந்தாலோ, உடனே அருகில் இருக்கும் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும், அறிவுறுத்தல்களை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

No comments:
Post a Comment