குமரி மாவட்டம் கல்குளம் வட்டவழங்கல் அலுவலர் சுனில்குமார் தலைமையிலான அலுவலர்கள் இன்று தக்கலை அருகே ரோந்து பணியில் இருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஆட்டோவினை சோதனை செய்தனா. அப்போது அதில் சுமார் 500 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அரிசியை கடத்தி கேரளாவுக்கு கொண்டு சென்று கள்ளச் சந்தையில் விற்பனை செய்ய கொண்டுச் செல்வதை உறுதி செய்த வழங்கல் அதிகாரி வாகனத்தை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேர்கொண்ட போது ஆட்டோ டிரைவர் தப்பி ஓடினார்.
மேலும் நூதன முறையில் இருசக்கர வாகனத்தில் கொண்டு வந்த 125 கிலோ அரிசியும் வகனத்துடன் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் ஆட்டோ, இருசக்கர வாகனம் மற்றும் அரிசியினை பறிமுதல் செய்து வட்ட வழங்கல் அலுவலகத்திர்கு கொண்டு ஒப்படைத்தனர்.
அரிசியினை உடையார்விளை கிட்டங்கியில் ஒப்படைக்கபடுகிறது. அரிசி கடத்தி வந்தவர்கள் குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது.

No comments:
Post a Comment