நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் இ.ஆ.ப அவர்கள் இன்றைய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது. நாகர்கோவில் மாநகராட்சிக்கு சொந்தமான முக்கடல் அணையில் இருந்து கிருஷ்ணன் கோவில் தண்ணீர் சுத்தகரிப்பு நிலையத்திற்கு வரும் 600mm பிரதான குழாயில் நாகர்கோவில் திட்டுவிளை ரோட்டில் துவரங்காடு Petrol bunk அருகில், இசாந்திமங்கலம் கிராம நிர்வாக அலுவலகம் மற்றும் பஞ்சாயத்து அலுவலகம் அருகில் மற்றும் அருகுவிளை வெள்ளாளர் தெரு ஆகிய நான்கு இடங்களில் பழுது ஏற்பட்டு தண்ணீர் விரையம் ஆகுவதால் மேற்படி பழுதுகளை சரி செய்ய வேண்டி உள்ளது.
இதனால் நகரில் இடலாக்குடி, வடிவீஸ்வரம், வாகையடி கோட்டார், வடசேரி போன்ற பகுதிகளில் குடிநீர் விநியோகம் 7 நாட்கள் தாமதம் ஆகும் என நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

No comments:
Post a Comment