உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு 27.9.2022சென்னை, கலைவாணர் அரங்கில், மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் டாக்டர் மா. மதிவேந்தன் அவர்கள் "தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் - 2022” வழங்கும் விழாவில், சிறந்த மாவட்டத்திற்கான, சுற்றுலா மேம்பாடு விருதினை கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.அரவிந்த், இ.ஆ.ப., அவர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் திரு.பி.சந்தரமோகன், இ.ஆ.ப., சுற்றுலாத்துறை இயக்குநர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் திரு.சே.ரா.காந்தி, இ.ர.பா.ப., தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொது மேலாளர் திருமதி எல்.பாரதி தேவி மற்றும் அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:
Post a Comment