நாகர்கோவிலில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் வரவேற்பு பெட்டகத்தினை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் புதுமைப் பெண் திட்டத்தினை இன்று (05.09.2022) சென்னை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்ததைத் தொடர்ந்து, குமரி மாவட்ட ஆட்சித்தலைவர் அரவிந்த், இ.ஆ.ப.அவர்கள், நாகர்கோவில் மாநகர மேயர் மகேஷ் அவர்கள் முன்னிலையில், நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் உயர்கல்வி பயிலும் கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1000/- க்கான வங்கி பற்று அட்டை (Debit Card) மற்றும் வரவேற்பு பெட்டகத்தினை வழங்கினார்கள்.
No comments:
Post a Comment