காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாதயாத்திரை மேற்கொள்ள உள்ளார். இந்த பாத யாத்திரையின் தொடக்க நிகழ்ச்சி கன்னியாகுமரியில் 7-ந்தேதி மாலையில் நடக்கிறது.
இந்நிகழ்ச்சியில் தமிழக முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதையொட்டி பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கன்னியாகுமரி கடற்கரையையொட்டி பிரமாண்டமான மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
No comments:
Post a Comment