இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்தும் குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கோரியும் நாகர்கோவில் பிரஸ்கிளப் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் அனைத்து செய்தியாளர்களும் கலந்து கொண்டனர். செய்தி சேகரிக்க செல்லும் செய்தியாளர்கள் தாக்கப்படுவதும், கொலை மிரட்டலுக்கு உள்ளாக்கப்படுவதும் தற்போது அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேம்பார் பகுதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இடப்பிரச்சனை சம்பந்தமாக சூரங்குடி காவல் நிலையத்தில் பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.
இதில் செய்தி சேகரிக்க சென்ற செய்தியாளர்களின் செல்போன்களை பறித்து, கைது செய்வேன் என காவல் உதவி ஆய்வாளர் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment