கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் வழக்கமாக தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள். ஆனால் சமீபகாலமாக மருத்துவமனைக்கு வருகின்ற நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
குறிப்பாக ஏராளமானோர் காய்ச்சல், இருமல் பாதிப்புடன் வந்து செல்கிறார்கள். இன்றும் புற நோயாளிகள் பிரிவில் கூட்டம் அலைமோதியது. காய்ச்சல் பாதிப்பை பொருத்தமட்டில் ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றவர்களுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment